மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வருகிறது!

சென்னை,

த்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான 4 சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களும் இன்று தமிழகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில், சிஆர்பிஎப் வீரர்கள் மீது மாவோயிஸ்ட்கள்  திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த  கொடூர தாக்குதலில்  26 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ,தில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

மரணம் அடைந்த 4 தமிழக வீரர்கள் உடல் சொந்த ஊர் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.  இன்று இரவுக்குள் அவர்களது சொந்த ஊர் சென்றடையும்  என தெரியவருகிறது.

இறந்த வீரர்களின்  திருமுருகன் என்பவர்  சேலம் கெங்கவல்லியை சேர்ந்தவர், பத்மநாபன் என்பவர்  தஞ்சை நல்லூரை சேர்ந்தவர். செந்தில்குமார் என்ற வீரர் திருவாரூர் நீடாமங்கலத்தை சேர்ந்தவர். இவர்களது உடல் விமானம் மூலம்  திருச்சி  கொண்டு வரப்படுகிறது.

மதுரை பெரியபூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி உடல் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது.

பலியான வீரர்களின் சொந்த ஊர்களில் மக்கள் சோக வெள்ளத்தில் உள்ளனர்.

பலியான வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்து உள்ளது.

You may have missed