போலீசில் சரணடைந்த மாவோயிஸ்ட் தம்பதிக்கு ரூ.5 லட்சம் பரிசு

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டம் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ், ரத்னா தம்பதியர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த தம்பதியருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,‘‘மாநில அரசு அறிவித்துள்ள சரண் அடைபவர்களுக்கான சிறப்பு திட்டத்தின்படி மவோயிஸ்ட் தம்பதியர் இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளனர்’’ என்று மால்கங்கிரி எஸ்.பி. மீனா தெரிவித்துள்ளார். இதையடுத்த பரிசுத் தொகையான ரூ.5 லட்சத்தை தம்பதியரிடம் போலீசார் வழங்கினர்