மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

டெல்லி

மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களைவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜ்யசபா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற மேல்சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் தமிழகம் உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 எம்.பி.க்கள் பதவி காலியாகிறது. இவர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ந்தேதியுடன் முடிவடைகறிது.

இந்த பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த பதவிகளுக்கு மார்ச் 26ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் திமுகவுக்கு 3 பேரும், அதிமுகவுக்கு 3 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

ராஜ்யசபா எம்.பி.க்கள் குறித்த மேலும் செய்திகளைக் காண கீழே உள்ள லிங்-ஐ கிளிக் செய்யுங்கள்…

https://www.patrikai.com/51-new-mps-will-be-elected-in-rajya-sabha-in-april-bjp-tense-with-fear/

https://www.patrikai.com/6-tamil-nadu-rajya-sabha-mp-term-ends-on-april-election-soon/