29ந்தேதி திமுக பொதுக்குழு – பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தல் – ஸ்டாலின்

சென்னை:

திமுகவில் காலியாக உள்ள திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும், அதையொட்டி வரும் 29ந்தேதி  திமுக பொதுக்குழு கூடுவதாக திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

சென்னை – அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 29-03-2020 அன்று கூடும் என்றும், அன்றைய தினம்  கழக பொதுச்செயலாளர் மற்றும் கழக பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளார்.