நெட்டிசன்:

லஷ்மி  (lakshmi rs)  அவர்கள் “ஒரு துரோகத்தின் கதை” என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு:

ஜெகதீஷ் சந்திர போஸ்..

அயராத உழைப்பு, தன்னம்பிக்கை, இவை மட்டுமே இல்லை, மார்க்கோனியின் துரோகமும் இணைந்தது தான் இவரது வாழ்க்கை, என நிறைய இவரைப் பற்றி படித்ததும் புரிந்து கொள்ள முடிகிறது..

இவரது தந்தை ஆங்கிலேய அரசின் உயர் பதவியில் இருந்தவர். ஏழை மக்களுக்கு தன் சொத்துக்களை விற்று உதவிகள் செய்தவர். ஆங்கில வழிப் படிப்பில் தன் மகனை சேர்க்காமல் எல்லோரும் படிக்கும் வங்க மொழி வழி படிப்பில் சேர்த்திருக்கிறார்…
போஸும் நன்கு படித்து, இயற்பியல் பட்டம் பெற்று மருத்துவ படிப்பிற்காக தந்தையின் விருப்பத்தின் பேரில் ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, இங்கிலாந்து நாட்டிற்கு மருத்துவ மேல் படிப்பிற்கு செல்கிறார்…
அந்த படிப்பு ஏனோ இவரை கவர வில்லை. இயற்கை அறிவியலிலும், அறிவியல் படிப்பிலும் மேற் படிப்பு படித்து இந்தியா திரும்புகிறார்…

மாநில கல்லூரியில் பேராசிரியராக பணி புரியும் போஸுக்கு இந்தியர் என்பதால் முழுச்சம்பளம் தரவில்லை. மூன்று வருடம் சம்பளம் வாங்காமல் மிகத் திறமையாக கல்லூரியை நடத்துகிறார் போஸ்..

இதை கண்ணுற்ற அப்போதைய வைஸ்ராயான ரிப்பன் அவர்கள் இவரை கல்வி பணி அதிகாரியாக நியமனம் செய்கிறார்…
முப்பத்தைந்து வயதில் பாடம் நடத்துவதிலிருந்து சற்றே விலகி மின் காந்த அலைகள் குறித்து ஆராய்ச்சி செய்ய முயல்கிறார். பல இடர்பாடுகளுக்குப் பின் ரேடியோ அலைகளை உருவாக்குகிறார். இதுதான் இப்போதைய மைக்ரோவேவ் அலைகள்…கம்பியில்லா தகவல் சாதனத்தை கண்டுபிடித்த முதல் ஆளுமையும் இவராகவே இருக்கிறார். இவரது முயற்சியில் முதல் ரேடியோ எழுகிறது…
இவருடைய தவறு வணிக நோக்கு எனக்கில்லை என்று தனது கண்டுபிடிப்புகளுக்கு பேடன்ட் வாங்கவில்லை..இவர் கண்டுபிடித்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலி நாட்டு மார்கோனி ரேடியோ ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்..

போஸின் கண்டுபிடிப்பு கருவியில் சில மாற்றங்கள் செய்து தான் கண்டுபிடித்ததாக ரேடியோவை மார்க்கோனி தன் இருபத்தி இரண்டு வயதில் வெளியிட உலகமே அவரை கொண்டாடுகிறது..நோபல் பரிசு பெறுகிறார்.. மின் காந்த அலைகள் பற்றி நேர்காணலில் எவரேனும் கேள்விகள் கேட்க நேர்ந்தால் ஒன்றும் புரியாமல் சமாளித்து வைக்கிறார் மார்கோனி..

காப்பியடித்து கருவி வெளியிட்டவர் எங்ஙனம் பதிலுரைப்பார்??

ஆனால் பின் வந்த அறிவியல் வல்லுநர்கள் ரேடியோ போஸின் கண்டுபிடிப்பு என்று அறிகிறார்கள்..  உலகின் முதல் ரேடியோவைக் கண்டுபிடித்தது இந்தியாவின் போஸ் என்று 100 வருடங்கள் கழித்து IEEE தெளிவாக அதிகார பூர்வமாக அறிவிக்கிறது…

இனிமேல் எவரேனும் ரேடியோவைக் கண்டுபிடித்தது இத்தாலி மார்க்கோனி என்றால் இல்லை எங்கள் நாட்டு போஸ் என்று அடித்துச் சொல்லுங்கள்…