டப்பிங் படத்தை நேரடித் தமிழ்ப் படம் போன்று விளம்பரப்படுத்துவதால் விஜய் சேதுபதி அதிருப்தி….!

2019-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி சனில் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘மார்க்கோனி மத்தாய்’.

ஜெயராம், ஆத்மியா ராஜன், பூர்ணா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த, இந்தப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில்தான் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

தற்போது இந்தப் படத்தின் தமிழ் டப்பிங் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார்கள். விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய தமிழ்ப் படம் என்பது போல் விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும் போஸ்டர்களில் விஜய் சேதுபதியின் படத்தைத் தவிர வேறு யாருடைய படத்தையும் படக்குழு வெளியிடாதது இன்னும் அவரை அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது .