ஷரபோவா : தடைக்குப் பின் கிடைத்த வெற்றி!

Maria Sharapova beats Roberta Vinci on return from doping ban

 

15 மாதத் தடைக்குப் பின் பங்கேற்ற முதல் போட்டியிலேயே ஷரபோவா வெற்ரறி பெற்றுள்ளார்.

 

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான ஷரபோவா, 30 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் ஆவார். கடந்த 2016ஆம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஷரபோவாவுக்கு 15 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது. இந்த 15 மாத தடைக்காலம் சில நாட்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, ஜெர்மனியில் நடைபெறும் ஸ்டர்ட் கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பங்கேற்று விளையாடினார். முதல் சுற்றில் இத்தாலியின் ராபர்டா வின்சியை எதிர்கொண்டார். முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய ஷரோபோவா, அடுத்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்றெடுத்தார். ஒரு மணிநேரம் 43 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியின் முடிவில், 7-5, 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த தருணத்திற்காக தாம் நீண்டகாலம் காத்திருந்ததாக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட ஷரபோவா கூறியுள்ளார்.