டெல்லி: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்பட ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்  விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த  வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ‘ராஜீவ்காந்திகேல் ரத்னா’, ‘அர்ஜுனா விருது,  துரோணாச்சார்யா விருது,  டெய்ன் சந்த் விருது, டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதுகள், மவுலானா அபுல் கலாம் ஆசாத் (மக்கா) டிராபி, ராஷ்டிரிய கேல் புரோட்சஹான் புருஸ்கர் வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த விருதுக்கு ஒவ்வொரு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு  துறைகளைச் சேர்ந்த சங்கங்கள் பரிந்துரை செய்யும். இதை ஆய்வு செய்ய குழு உள்ளது. அந்த குழுவினர், பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்து, தகுதியான நபர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில், ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உள்பட பலரது  நாடு முழுவதும் பலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

இவர்களில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதில்,  கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கன ராணி ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

மெதலும், கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா , அட்னானு தாஸ் (வில்வித்தை), டூட்டி சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் செட்டி (பேட்மிண்டன்), சுபேதர் மணிஷ் கவுசிக், லாவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை) உள்ளிட்டமொத்தம் 27 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.

மேலும், துரோணாச்சார்யா விருது  13 பேருக்கும்,  Ha டெய்ன் சந்த் விருது 15 பேருக்கும், 
N டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதுகள் 2019: 8 பேருக்கும், 
மவுலானா அபுல் கலாம் ஆசாத் (மக்கா) டிராபி: 1 விருது ஒருவருக்கும், 
ராஷ்டிரிய கேல் புரோட்சஹான் புருஸ்கர் விருது 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.