எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா, பவர் ஸ்டார், ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ’மரிஜுவானா’.

தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 51 காட்சிகளை நீக்கினால் மட்டுமே ‘யு’ சான்றிதழ் கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளனர்.

படத்தின் காட்சிகளைத் தூக்கினால், கதைக்களமே போய்விடும் என்பதால் ஏ சான்றிதழ் வாங்கிவிட்டோம். இளைஞர்களுக்கான படம் என்பதால் அவர்கள் பார்த்தாலே போதுமானது” என்று தெரிவித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் எம்.டி.ஆனந்த்.