அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, முகேஷ் ,நெடுமுடி வேணு, பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் படம் ‘மரைக்கார் அரபிக் கடலிண்டே சிம்ஹம்’.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன் லால் நடித்து கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காலாபானி’.. அதை தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் இணைந்து பயணிக்கிறார் .

தமிழில் இப்படம் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ எனும் பெயரில் வெளியாக உள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினைக் கவனிக்கிறார். ரோனி நபேல் இசையமைக்கிறார் . வரும் மார்ச் 26 ஆம் தேதி தமிழகமெங்கும் இப்படம் வெளியாகிறது.

தமிழில் இப்படத்தை தாணு தயாரிக்கிறார்.