ஆசிய பாராலிம்பிக் போட்டியில் தேசியக் கொடி ஏந்தி செல்லும் தங்கமகன் ’ மாரியப்பன் ’

இந்தோனேசியால் நடக்க இருக்கும் ஆசிய பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஏந்திசெல்லும் பெருமையை தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பெற்றார்.

mariyappan

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் வரும் 6ம்தேதி முதல் 13ம் தேதி வரை ஆசிய பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் என மொத்தமாக 302 பேர் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் ஆசிய கேம்ஸ் கிராமத்துக்குள் நுழைந்த போது அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு விளையாட்டு அமைச்சகம் கொடுக்க வேண்டிய 2.5 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்காததே காரணம் என பாராலிம்பிக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஒரு வழியாக அந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு இந்திய வீரர்கள் கிராமத்துக்குள் அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் தேசியக் கொடி ஏந்திச்செல்லும் பெருமையை ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு பெற்றார்.