ஒரே நாளில் 16 பில்லியன் டாலர் இழந்த மார்க் ஜூகர்பெர்க்: ஏன் தெரியுமா?

வாஷிங்டன்:

பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் ஒரே நாளில் 16 பில்லியன் அளவுக்கு சரிவை சந்தித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், அதே பேஸ்புக் மூலம் பெரும் சரிவை எதிர்கொண்டார்.

சமீப காலமாக பேஸ்புக் பயன்பாட்டாளர்களின்  தனிப்பட்ட தகவல்களை வெளிநிறுவனங்களுக்கு விற்பனை செய்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் மீதிலான நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே குறைந்து வருகின்றது. பல நாடுகள் பேஸ்புக் வலைதள நிறுவனத்துக்கு கடும் கண்டனங்களையும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

அரசியல்வாதிகள் பிரசாரத்திற்கு உதவி வந்தபிரிட்டனைச் தலைமையிடமாக கொண்ட கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், பேஸ்புக் நிறுவன தகவல்கள் மூலம் அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா உள்பட பல நாடுகளின் தேர்தல் விவகாரங்களில் தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.  . 5.62 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே ஒத்துக் கொண்டுள்ளனது.

சமீபத்தில்  தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ப பங்கேற்ற மார்க் ஜுகர்பெர்க், பேஸ்புக் வலைதளம் மூலம் வன்முறைகள் தூண்டப்படுவதை ஒப்புக்கொள்ளும் விதத்தில் ஆமோதித்து பேசியிருந்தார்.

அப்போது,  சமூக வளைதளங்கள் வன்முறையை தூண்டும் விதமாக மாறி வருகிறது. மியான்மர், இந்தியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் பகிரப்படும் தகவல்களால் வன்முறைகள் வெடிக்கி ன்றன. பேஸ்புக் தளத்தில் பரப்பப்படும் புரளிகளால் சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்”.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்சப்களில் பகிரப்படும் தவறான தகவல்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு சரியான ஒரு தீர்வு வேண்டும் என்று கூறினார்.

இதுபோன்ற சூழல் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின வணிக அமைப்பு கடுமையான சோதனைகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம்  வெற்றி கரமாக செயல்பட முடியுமா என்ற கேள்விகளும்  எழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று  அமெரிக்க பங்குச் சந்தையில் பேஸ்புக் நிறுவ னத்தின் பங்குகள் 19.6 விழுக்காடு வரையில் சரிவு கண்டன. இதனால் அந்நிறுவனத்தின் மதிப்பில் சுமார் 124 பில்லியன் அமெரிக்க டாலர் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் பேஸ்புக் நிறுவனர்  மார்க் ஜுகர்பெர்க் சொத்து மதிப்பும் சரிவு கண்டது.

அவரது சொத்து மதிப்பு பேஸ்புக் விலை வீழ்ச்சியின் அடிப்படையில் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர் வரை குறைந்துள்ளதாக அமெரிக்க சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவன பங்குகள் வரலாறு காணாத சரிவை சந்தித்து, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.