‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தின் பாடல் வெளியீடு…!

காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் சரண், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’.

பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் காவ்யா தப்பார் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா, நாசர், ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்ய, சைமன் கே.கிங் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் “கண்ணே கருவிழியே” பாடல் வெளியாகியுள்ளது .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-