திருமண வயதை குறைக்க கோரி வழக்கு: மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்த உச்சநீதி மன்றம்

டில்லி:

ணின் திருமண வயதை 21ல் இருந்து 18ஆக  குறைக்க கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,  மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தது.

நமது நாட்டின் சட்டத்தின்படி.  ஆண்களின் திருமண வயது 21 என்றும், பெண்களின் திருமண வயது 18 என்றும் கூறப்பட்டு உள்ளது.உள்ளது. இந்த வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம். அந்த திருமணம் செல்லுபடி ஆகாது.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தில், ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்கும்படி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில்,  இந்திய ராணுவத்தில் சேரவும், தேர்தலில் வாக்களிக்கவும் வயது 18 என்று அறிவிக் கப்பட்டு உள்ள நிலையில், ஆண்களின் திருமண வயது மட்டும் 21ஆக உள்ளது. அதையும் 18 ஆக குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ,

இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்து. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்து நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும்,  மனுதாரரின் கோரிக்கைக்கு எந்த காரணமும் இல்லை என்பதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதாகக் கூறிய நீதிபதிகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீண்டிக்கும் வகையில் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பதாகவும் உத்தரவிட்டனர்.