ரெயில்வே இணை அமைச்சர் மீது மணமான பெண் பாலியல் புகார்

வுகாத்தி

த்திய ரெயில்வே இணை அமைச்சர் ராஜென் கோகெய்ன் மீது ஒரு மணமான  பெண் அசாம் காவல்துறையினரிடம் பாலியல் புகார் அளித்துள்ளார்.

சமீபகாலமாக பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தொல்லைக்குள்ளாகும் பெண்களில் பல சிறுமிகளும் உள்ளனர். இதனால்  பெண்கள் பாதுகாப்புக்காகப் பல புதிய சட்டங்களை பாஜக அரசு இயற்றி வருகிறது. அத்துடன் பாலியல் குற்றம் செய்வோருக்குத் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆயினும் குற்றங்கள் குறையவில்லை.

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஒரு அமைச்சரே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு அவலம் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. மத்திய ரெயில்வே இணை அமைச்சர் ராஜென் கோகெய்ன் மீது ஒரு மணமான 24 வயதுப் பெண் பாலியல் புகார்  ஒன்றை அசாம் மாநிலம் நாகவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த தகவலை நாகவுன் காவல்துறை சூப்பிரண்ட் சபிதா தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சபிதா தாஸ், “இந்த புகாரை நாங்கள் பதிவு  செய்து விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ராஜென் கோகெய்ன் மீது மூன்று பிரிவுகளில் புகார் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த புகாரில் இந்த சம்பவம் சுமார் 7, 8 மாதங்களுக்கு முன்பு நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

புகார் அளித்த பெண்ணுக்கும் அமைச்சருக்கும் ஏற்கனவே அறிமுகம் உள்ளது. அமைச்சர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு பலமுறை சென்றுள்ளார்.  அந்தப் பெண்ணின்க்ணவர் மற்றும் குடும்பத்தார் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அமைச்சரை தற்போது கைது செய்யும் எண்ணம் இல்லை” எனத் தெரிவித்தார்.

You may have missed