‘தங்கமகன்’ மாரியப்பன் ‘பத்ம’ விருதுக்கு பரிந்துரை! விஜய்கோயல்…!

டில்லி:

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பெயர் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்படும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார்.

mar-koya

ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கம் கிடைத்தது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் (உயரம் தாண்டுதல்) மற்றும் தேவேந்திர ஜாஜாரியா (ஈட்டி எறிதல்) ஆகியோர் தங்கப்பதக்கமும், தீபா மாலிக் (குண்டு எறிதல்) வெள்ளிப்பதக்கமும், வருண்சிங் (உயரம் தாண்டுதல்) வெண்கலப்பதக்கமும் வென்று வரலாறு படைத்தனர்.

அவர்களை தனது இல்லத்திற்கு வரவழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.

இந்த நிலையில் அவர்களது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பாராஒலிம்பிக்கில் சாதித்த நமது விளையாட்டு நட்சத்திரங்களின் பெயர் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், கவுரவமிக்க பத்ம விருதுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.