விவசாயிகளை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு!

கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகளை திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பெண் கொடுக்க பலரும் முன்வராததால் இப்படி ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

farmer

கர்நாடகா மாநிலத்தில் படித்த மற்றும் மத்திய அரசு வேலையில் இருக்கும் ஆண்களையே தங்கள் வாழ்க்கை துணையாக பெரும்பலான பெண்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி ‘அதிரஷட திருமணம்’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அந்த பரிசு தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திருமணம் செய்யும் விவசாயி அனகொடு சேவா சகாக்கரி சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் சமூக ரீதியாக மற்றும் பொருளாதாராத்தில் பின் தங்கியுள்ள விவசாயிகள் பயன்பெறுவர். இது குறித்து விவசாயிகளுக்கான அனகொடு சேவா சகாக்கரி சங்கத்தின் தலைவர் கே பர் கூறுகையில், “ பெருமபாலான பெண்கள் படித்து வேலையில் இருக்கும் நபர்களையே தங்கள் வாழ்க்கை துணையாக தேர்வு செய்கின்றனர். இதனால் விவசாயிகளை திருமணம் செய்ய முன்வரும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதற்காக தான் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம் “ என கூறினார்.