15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய்! வெறும் கண்ணால் பார்க்கலாம்..

15ஆண்டுகளுக்கு பிறகு, இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வர இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக செவ்வாய் கிரகத்தை மிகவும் எளிதாக தெளிவாக பார்க்க இயலும் என்றும், செவ்வாய் கிரகம் பிரகாசமாக கண்ணுக்கு தெரியும் என்று கூறப்படுகிறது.

88 ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு, இதே ஜூலை மாதத்தில் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டின் மிகப்பெரிய  சந்திர கிரகணம் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ள நிலையில்,  தற்போது இதே ஜூலை மாதத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய்க்கிரகம் பூமிக்கு மிக அருகில் வர இருக் கிறது. இந்த அதிசயங்கள் இந்த ஆண்டின், ஜூலை மாதத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.

செவ்வாய்க்கிரகம் குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நிலையில், நாசா, இஸ்ரோ, ப்ளூ ஒரிஜின், ஸ்பேஸ் எக்ஸ் தீவிர ஆராயச்சி மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாயில் நீரோடிடை இருப்பதாகவும் கண்டறிந்து உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பூமிக்கு மிக அருகில் செவ்வாய் காட்சி அளிக்க இருக்கிறது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 5 கோடியே 76 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் செவ்வாய் கிரகம் இருக்கும் என்றும், தற்போது செவ்வாய் கிரகத்தில்  வீசி வரும் புயல் இன்னும் சில நாட்களுக்கு செவ்வாய் கிரகத்தை அப்படியே சுற்றி சுற்றி வரும் என்றும் ஆராச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

இந்த புயல் காரணமாக  செவ்வாய் மிகவும் வெளிச்சமாக கண்ணுக்கு தெரியும், அதை வெறும் கண்களால் பார்க்கலாம், இதை இந்தியாவிலும் காண முடியும் என்றும்  அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்து  உள்ளது.

ஏற்கனவே கடந்த 2003ம் ஆண்டு இதேபோன்று நிகழ்வு நடைபெற்றுள்ளது என்றும், அதைத் தொடர்ந்து இன்று இந்த அரிய நிகழ்வு நடைபெறும் என்றும் கூறி உள்ளனர். இதுபோன்ற அடுத்த நிகழ்வு வரும் 2035-ம் ஆண்டு நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.