விரைவில் சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்தில் தரையிங்கப்போகிற அதே சமயத்தில் 2008 ல் நாசா செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்ய பீனிக்ஸ் ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது.

செவ்வாயின் வடதுருவத்தின் அருகில் தரையிறங்கும் இந்த கலம் செவ்வாய் கிரகத்தின் மண், பனிக்கட்டி ஆகியவற்றைச் சேகரிக்கும். இது அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் குறித்த ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலயுள்ள படம் ஃபீனிக்ஸ் தரையிறங்கும் போது அதை மேலிருந்து படம் எடுத்தது 316 கீ.மீ. உயரத்தில் 3.4 கி.மீ / செகண்டு வேகத்தில் செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஹைரைஸ் (HiRise) எடுத்த படம். இதை எடுக்கும் போது ஹைரைஸுக்கும் ஃபீனிக்ஸுக்கும் இடையே 760 கி.மீ. தூரம் இருந்தது. (அப்படி ஒரு கோணத்தில் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றது)

இந்தப் படத்தில் புள்ளி போல் தெரிவது (பெரிதாக்கிக் காட்டப்பட்டிருப்பது) தான் ஃபீனிக்ஸும் அதன் பாராசூட்டும்! சூரியன் ஹைரைஸுக்குப் பின்னால் இருப்பதால் பளிச் சென்று இருக்கின்றது ஃபீனிக்ஸ். இப்போது அதன் நிழல் எந்தக் கரும்புள்ளி என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

கிட்டத்தட்ட 10 கி.மீ. விட்டம் கொண்டிருக்கும் ஒரு பள்ளத்தாக்கில் சென்று விழுவது போல் தோன்றினாலும், உண்மையில் பள்ளத்தாக்கில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் (செங்குத்தாக) இருக்கின்றது ஃபீனிக்ஸ். படமெடுக்கும் போது தரையில் இருந்து 13 கி.மீ.உயரத்தில் ஃபீனிக்ஸ் இருக்கின்றது.

அதன்பின்னர் செவ்வாயில் தரையிறங்கிய ஃபீனிக்ஸ் கலம் எடுத்தனுப்பியிருக்கும் படத்தைப் பார்க்கையில் செவ்வாயில் பனிக்கட்டி இருப்பது உறுதியாயிருக்கின்றது. இதன் மூலம் நீர் மூலக்கூறுகள் இருக்கும் சாத்தியமும், நுண்ணுயிரிகள் வாழும் சாத்தியமும் இருக்கின்றது.

அந்தப் படத்தினை அடுத்த வாரம் காண்போம்

இரத்தினகிரி சுப்பையா