ரூ 60 ஆயிரம் கொடுத்தாலும் ஆர் கே நகர் மக்கள் ஏமாற மாட்டார்கள் : திமுக வேட்பாளர் நம்பிக்கை

சென்னை

சென்னை ஆர் கே நகர் தொகுதி திமுக வேட்பாளர் மருது கணேஷ் மக்கள் ஏமாற மாட்டார்கள் என கூறி உள்ளார்.

சென்னை ஆர் கே நகர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது.   வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர்.   இன்று மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.   மொத்தம் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திமுக வேட்பாளரான மருது கணேஷ் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.  அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.   அப்போது அவர், “இடைத் தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்னும் நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.   பலரும் வாக்களிக்க பணம் கொடுத்து வருகின்றனர்.   ஆனால் இந்தத் தொகுதி மக்கள் ரூ. 6000 அல்ல ரூ. 60000 கொடுத்தாலும் ஏமாற மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.