லக்னோ:

புல்வாமா பயங்கரவாத குண்டுவெடிப்பில் சிக்கி பலியான உ.பி. மாநிலத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பாஜக எம்பி சாக்ஷி மகராஜ், பொதுமக்களை பார்த்து  வாக்கு சேகரிக்கும் வகையில் கையை அசைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டு மக்களிடையே  பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ள புல்வாமா தற்கொலை பயங்கரவாதி தாக்குதலில் 2 தமிழர்கள் உள்பட 44 பேர் பலியானார்கள். இந்த தாக்கு தலில் அதிக பட்சமாக உ.பி. மாநிலத்தை சேர்ந்த 12 வீரர்கள் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இறந்த வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள்,  ராணுவத்தினர் மற்றும் முப்படை தளபதிகள், சிஆர்பிஎப் வீரர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்திய நிலையில், இறந்த விரர்களின் உடல்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மிரட்டல்: இது தியாகி அஜித் குமார் ஆசாத்தின் கடைசி பயணமாக இருந்தது, ஆனால் எல்.ஜி. எம்.பி. சாக்ஷி மஹாராஜ் இது ஒரு பி.ஜே. சாலை சாலையல்ல என்று கூறப்பட வேண்டும், ஆனால் நாடு இழந்த ஒரு தைரியமான பயணத்தின் இறுதி பயணம்.

இந்த நிலையில், உ.பி. மாநிலத்தில் வீர மரணம் அடைந்த  அஜித்குமார் என்ற வீரரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்துகொண்டனர். ராணுவ  மரியாதையுடன் எடுத்துச்செல்லப்பட்ட அஜித்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏறிய அந்த பகுதியை சேர்ந்த பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ். சாலையோரம் நின்று இறந்த வீரருக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தி வந்த மக்களை பார்த்து கையை அசைத்தும், கைகூப்பியும் வாக்கு களை சேகரிக்கும் வகையில் செயல்பட்டது பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்த நிலையில், இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் குரலெழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சாக்ஷி மகாராஜ் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது பாஜகவின் ஊர்வலம் அல்ல… நாட்டுக்காக உயர்நீதி வீரரின் இறுதி ஊர்வலம்… இதிலும் அரசியல் காணும் பாஜகவின் நடவடிக்கையை கடுமையாக சாடி வருகின்றனர்.

சாவு ஊர்வலத்திலும் ஆதாயம் தேடும் பாஜகவினரின் அநாகரிக செயல் இது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சாக்ஷி மகாராஜின் வீடியோ…