மறுமலர்ச்சி 2 : நீங்களும் ஒரு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆகலாம்….!

1998 ஆம் ஆண்டு மம்மூட்டி, தேவயானி, மனோரமா, ரஞ்சித் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோரது நடிப்பில், மறுமலர்ச்சி பாரதி இயக்கத்தில், ஹென்றியின் தயாரிப்பில், எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் 14 சனவரி 1998 இல் வெளியாகி வணிகரீதியில் வெற்றி பெற்றத் திரைப்படம்.

இது படையாச்சி எனும் சமுதாயத்திற்கான நல்லெண்ண நோக்கத்தை கொண்ட இப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த படத்திற்கான விருது (1998) கிடைத்தது.

காட்டுமன்னார்கோவில் அருகே வாழ்ந்து மறைந்த வள்ளல் இராசு(படையாட்சி).

அவரது வரலாற்றை மையமாக வைத்து ‘மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ்நாட்டிற்கு அந்த வரலாற்றை அறியத்தந்தவர் இயக்குநர் பாரதி

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முனைப்பில் அந்த சமூகத்தினர் உள்ளனர் .

இது குறித்து விமல் வர்மா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் மறுமலர்ச்சி இரண்டாம் பாகம் ப்ரீ ப்ரொடக்ஷனுக்கு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார் .

இது ஒரு கிரௌட் ஃபண்டிங் படம் . திரௌபதி படம் போல இதுவும் ஒரு கிரௌட் ஃபண்டிங் படம். இது மூன்று வகையாக பிரித்துள்ளனர் .ஃபண்டிங் செய்ய விருப்பமுள்ளவர்கள் குறைந்த பட்சம் ஒரு லட்சம் குடுக்க வேண்டும் . அப்படி கொடுப்போருக்கு அக்ரீமெண்ட் போட்டு கொடுக்கப்படும் .

படத்தின் கலெக்ஷனின் போது கொடுத்த பணத்தை திருப்பி தரப்படும் . அது போல லாபத்திலும் சதவீதம் தரப்படும் .

அந்த சமூகத்தை சேர்ந்த (படையாச்சி ) புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு தரப்படும் .அவர்கள் முன்பணம் கொடுத்து நடித்துவிட்டு படம் வெளிவந்ததும் கலெக்ஷன் சமையத்தில் அது திருப்பி தரப்படும் .

ஒரு லட்சத்துக்கு கீழே முன்பணம் கொடுக்கும் வன்னிய சமுதாயத்தினருக்கு படம் கலெக்ஷனுக்கு பின் கொடுத்த பணம் மட்டுமே திருப்பி தரப்படும் .ஒரு லட்சத்துக்கு கீழே முன்பணம் கொடுப்பவருக்கு அக்ரீமெண்ட் கொடுக்கப்படாது . 5 பேர் சேர்ந்து ஒரே அக்கவுண்டில் குடுத்தால் அக்ரீமெண்ட் உண்டு என்று கூறி பாரதியின் வாங்கி கணக்கை பகிர்ந்துள்ளார் .