மருதமலை முருகன் கருவறையில் பாஜகவின் வேலை வைத்து வழிபட அனுமதி மறுப்பு

கோவை

ருதமலை முருகன் கருவறையில் வேல் யாத்திரையில் எடுத்துச் செல்லப்பட்ட வேலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தற்போது வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது.  தமிழக பாஜக தலைவர் முருகன் இந்த வேல் யாத்திரையை நடத்தி வருகிறார்.  இதையொட்டி தமிழக அரசு தினம் கைது செய்வதும் அடுத்த நாள் யாத்திரை தொடர்வதுமாக உள்ளது.

இந்த வேல் யாத்திரை தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலுக்குச் சென்றுள்ளது.   மருதமலை முருகன் கோவில் தமிழகத்தில் ஏழாம் படைவீடு எனப் போற்றப்படுகிறது.   அந்த கோவில் கருவறையில் பாஜக தலைவர் முருகன் எடுத்து வந்த வேலை வைத்து வழிபட பாஜகவினர் முயன்றுள்ளனர்.

ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடு நிலவுவதால் முருகன் எடுத்து வந்த வேலை கருவறைக்குள் எடுத்துச் செல்ல குறிப்பாகக் கடவுள் சிலை அருகே எடுத்துச் சென்று கோவில் நிர்வாகம் மறுத்துள்ளது.  இது வீடியோ பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.