மருதுபாண்டியர், பசும்பொன் தேவர் குருபூஜை: சிவகங்கையில் 144 தடை

சிவகங்கை:

டைபெற உள்ள  மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் தேவர்  குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கையில் இன்று முதல் வரும் 31ந்தேதி வரை  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.


சுதந்திர போராட்டத்தின்போது ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நாள் வரும் 24ந்தேதி. அன்றைய தினம், திருப்பத்தூரில் தமிழகஅரசு சார்பில் நினைவு தினமும் கடைபிடிக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து,  27ம் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களது சமாதியில் குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து,  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும்  30ம் தேதி  பசும்பொன் தேவர் குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளது.

இந்த விழாக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்களும் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக அந்த பகுதிகளில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்து உள்ளார்.

இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்து உள்ளார்.