10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரிக்க முடிவு: மாருதி சுசுகி தகவல்

டெல்லி: 10,000 வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து உள்ளது.

உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதையடுத்து முன் எச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. அதற்காக பல முன்னணி நிறுவனங்கள் கைகோர்க்க ஆரம்பித்து இருக்கின்றன.

அவற்றில் முக்கியமாக மாருதி சுசுகி நிறுவனம் கைகோர்க்க ஆரம்பித்து உள்ளது. இது குறித்து மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி.பர்கவா கூறி இருப்பதாவது:

வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும். அக்வா ஹெல்த்கேர் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்பட உள்ளோம் என்றார்.