சென்னை

ந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் எதிர்பார்த்தது எதுவும் இடம் பெறவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இடைக்கால நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கைக்கு ஆளும் கட்சியான பாஜகவினர் புகழ் மாலை சூட்டி வருகின்றனர். அதே நேரத்தில் எதிர்கட்சியினர் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே பாலகிருஷ்ணன், “மக்கள் நீண்ட நாட்களாக கோரி வந்த வருமான வரி உச்சவரம்பை அரசு இப்போது அளித்துள்ளது. இந்த உச்ச வரம்பு ரூ. 5 லடமாக உயர்த்தப்பட்டது மக்களுக்கு மகிழ்வை அளிக்கும்.

ஆனால் இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயன் படக்கூடிய வகையில் அமையவில்லை. விவசாயிகள் எதிர்பார்த்த விஷயங்கள் எதுவும் இந்த அறிக்கையில் இடம் பெறவில்லை.”