தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முக்கிய பேச்சுவார்த்தை…!

சென்னை: சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.

இரட்டை எண்ணிக்கையில் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் 6 தொகுதிகள் ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கே பாலகிருஷ்ணன், திமுக ஒதுக்குவதாக கூறிய தொகுதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. இன்று எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்திலும் இது பற்றி விவாதிக்க உள்ளோம். திமுக குழுவினரும் அவர்கள் கட்சி தலைவரிடம் இது பற்றி கூறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.