சவால் விடுத்த நிகாத் ஜரீனை வென்று ஒலிம்பிக்கிற்குத் தகுதியான மேரி கோம்

புதுடில்லி: இந்தியா சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம் வென்றார். இது நடைபெற இருக்கும் ஒலிம்பிக்கில் போட்டிக்கான இடத்தை உறுதி செய்ய இந்தியாவிற்கு தேவைப்பட்ட ஒன்றாகும்.

51 கிலோ வரையறையில் சுமார் ஆறு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோம் , டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டித் தகுதிச் சுற்றில் நிகாட் சரீனை வீழ்த்தித் தேர்ச்சிப் பெற்றுள்ளார். மிகவும் எளிதான இந்த ஆட்டத்தில் 9 – 1 என்ற புள்ளியில் வெற்றி வாகைச் சூடினார்.

ஆட்டம் முடிந்தத் தருணத்தில் அவர் தன்னை எதிர்த்து ஆடியவருடன்  கை குலுக்க மறுத்தார். அப்போது அவர் “அவள் என்னை மதிக்காத பட்சத்தில் நான் ஏன் அவளை மதிக்கவேண்டும், அவளுடைய வீரத்தை ரிங்கிற்கு உள்ளே காண்பிக்க வேண்டும். ரிங்கிற்கு வெளியே அல்ல. அவள் முதலில் பிறரை மதிக்கக் கற்றுக்கொள்ளட்டும்”, என்று பேட்டியில் கூறினார்.

முன்பாக, மேரி கோம் தேர்வுக்குரிய வீராங்கனையாக பிரதிக்க அனுப்பி வைக்கப்பட்ட போது, நிகாட் இந்த முடிவை வெளிப்படையாக விமர்சித்து சவாலும் விடுத்திருந்தார். அக்டோபர் 17 அன்று விளையாட்டு அமைச்சகத்திற்கு இது குறித்து கடிதமும் எழுதியிருந்தார்.

மேற்கண்ட போட்டியின் முடிவுடன், மற்றத் தகுதிச்சுற்று ஆட்டங்களில், இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வாங்கிய சோனியா லாதீர், சாக்ஷி சவுதாரியிடம் தோற்றுப்போனார். 60 கிலோ வரையறையில் முன்னாள் சாம்பியனான சரிதா தேவி, சிம்ரஞ்சிட் கவுர் என்னும் வீராங்கனையிடம் பரபரப்பான ஆட்டத்தில் தோற்றுப்போனார்.