குத்துச்சண்டை போட்டி…இந்தியாவின் மேரிகாம் தங்கம் வென்றார்

டில்லி:

இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர் டில்லியில் கடந்த 28-ம் தேதி தொடங்கி இன்று முடிந்தது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மேரிகோம், பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜோசி கபுகோவை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

64 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பிவிலோ பசுமடரி, தாய்லாந்தின் சுடபான் சீசண்டீயை 3-2 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். இந்திய வீராங்கனைகள் பிங்கி ஜங்ரா 51 கிலோ பிரிவு, மணிஷா 54 கிலோ பிரிவு போட்டிகளில் தங்கம் வென்றனர். சரிதா தேவி 60 கிலோ பிரிவு, மீனாகுமாரி 54 கிலோ பிரிவு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

ஆண்கள் பிரிவில் சஞ்சித் 91 கிலோ, மனிஷ் கவுசிக் 60 கிலோ பிரிவு போட்டிகளில் தங்கம் வென்றனர். 69 கிலோ எடைப்பிரிவில் தினேஷ் தகார், 91 கிலோவுக்கு அதிகமான எடைப்பிரிவில் சதிஷ் குமார், 81 கிலோ எடைப்பிரிவில் தெவன்ஷு ஜெய்ஸ்வால், 75 கிலோ எடைப்பிரிவில் சவெட்டி போரா ஆகியோர் இறுதிப்போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து வெள்ளிப்பதக்கம் வென்றனர்