மாசி மாத வழிபாடு: சபரிமலை அய்யப்பன் கோயில் இன்று மாலை திறக்கப்படுகிறது

பந்தளம்:

ன்று மாசி மாதம் தொடங்கியதைத் தொடர்ந்து, வழக்கமான மாதாந்திர வழிப்பாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில்  இன்று மாலை திறக்கப்படுகிறது.

ஒவ்வெரு தமிழ் மற்றும் மலையாளம்  மாதத்தின்போதும், வழிப்பாட்டுக்காக சில நாட்கள் அய்யப்பன் கோவில் திறக்கப்படுவது வழக்கம்.  அதன்படி இன்று மாசி மாதம் தொடங்கி உள்ளது. இதையொட்டி,  இன்று மாலை 4,.30 மணிக்கு அய்யப்பன் கோவில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து  இரவு 10 மணிவரை நடை திறந்திருக்கும்.

நாளை முதல் (14ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, வரும் 18-ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்றும்,  18-ம் தேதி இரவு பத்தரை மணிக்கு ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

மாசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு, கேரள அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவதாகவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Masi Month Worship: Sabarimala Ayyappa Temple opens this evening, அய்யப்பன் கோவில், சபரிமலை, மாசி மாத வழிபாடு: சபரிமலை அய்யப்பன் கோயில் இன்று மாலை திறக்கப்படுகிறது
-=-