ஸ்பெயின்: 

ஸ்பெயினின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ்மோவில், லைகாவின் ஸ்பெயின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை (Lycamobile Spain) 372 மில்லியன் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) விலைக்கு வாங்கியுள்ளது.

இதற்காக ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களையும் சேர்ந்த உயர் அதிகாரிகள் கையெழுத்தினார். லைகா மொபைல் ஸ்பெயின் நிறுவன்ம் கடந்த 2010-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படு, லைக்கா நிறுவனத்தின் மிகப்பெரிய விர்ஸுவல் நெட் வோர்க்காக இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி இந்த நெட்வோர்க் 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

இலங்கை சேர்ந்த வர்த்தகரான அல்லிராஜா சுபாஷ்கரன், பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு சுமார் பத்து நாடுகளுக்கு மேலாக தனது தொலைத்தொடர்பு வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் இயங்கி வந்த லைக்கா நிறுவனத்தை 372 மில்லியன் யூரோவுக்கு விற்பதற்கு இன்று ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான மாஸ் மொவில் ஏற்கனவே ஸ்பெயின் நாட்டில் இயங்கிவந்த இலங்கை நிறுவனமான லிபார மொபைலை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 8.6 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட அந்த நிறுவனம் இன்று லைக்கா மொபைல் நிறுவனத்தை கொள்முதல் செய்வதன் மூலம் 10.4 மில்லியன் வாடிக்கையாளர்களை பெறும். இதன்மூலம் இந்த நிறுவனத்தின் ஆண்டுகான விற்பனை சுமார் 1,800 மில்லியன் யூரோக்களாக அதிகரிக்குமென மாஸ் மொவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

லைக்கா நிறுவனம் அண்மையில் இந்திய திரைத்துறையில் தனது முதலீடுகளை நகர்த்திவரும் நிலையில் பெரும் நிதியில் பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்து வருகின்றது. இந்திய திரைத்துறையில் தவிர்க்கமுடியாத தயாரிபாளராக இலங்கை சேர்ந்த அல்லிராஜா சுபாஷ்கரன் விளங்கி வருகிறார். இந்தியாவில் தமது முதலீடுகளை விரிவுபடுத்தும் முயற்சியில் இவர் மருத்துவ துறையிலும் முதலீடு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.