பிலிப்பைன்ஸ்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! 7.2 ரிக்டரில் பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.2  ஆக பதிவாகி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள  மைன்டனாவ் தீவு பகுயில் இந்த  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமான இந்திய நேரப்படி நேற்று இரவு 7.49 மணி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் கட்டிங்கள் குலுங்கின. மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளிலும், மைதானங்களிலம் தஞ்சம் புகுந்தனர்.

சமீபத்தில் இந்தோனிசியால் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனா ஏற்பட்டதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த  நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை  என தகவல்கள் வெளியாகி உள்ளது.