பிஜி தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவு

பிஜி தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தோனேசியாவிலும் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான சேதம் தவிர்க்கப்பட்டது.

earthquake1

பிஜி தீவுப்பகுதியில் உள்ளூர் நேரப்பட்டி 12.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிஜி தீவின் தலைநகரான சுவாவுக்கு 361 கி.மீ கிழக்காகவும், 559 கி.மீ. ஆழத்திலும் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஹவாயில் உள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறுகையில், “ பூகம்பம் பூமிக்கு அடியில் மிகுந்த ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் ஏற்படவில்லை. பசுபிக் பகுதியின் ரிங் ஆஃப் பயர் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் இது ரிக்டர் அளவில் 8.0 ஆக உணரப்பட்ட நிலையில் சில நிமிடங்களுக்கு பிறகு 8.2 ஆக அதிகரிக்கப்பட்டது. அதி ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டதால் மிகப்பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

எனினும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தோனேசியாவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. இது கிழக்கு லோம்போக்கின் பெலண்டிங் நகருக்கு மேற்கு தென் மேற்காக மையம் கொண்டிருந்தது. கிழக்கு லோம்போக்கில் இது கடுமையாக உணரப்பட்டது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்