ஆஸி நிலநடுக்கம் : சுனாமி உருவாக வாய்ப்பு?


நியூ கலிடோனியா,

ஸ்திரேலியாவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின்கி ழக்கு பகுதியில் உள்ள நியூ கலிடோனியா அருகே உள்ள தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.

இந்த  பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து நியூ கலிடோனியா மற்றும் அதன் அருகே உள்ள வானுயாடு உள்ளிட்ட தீவுகளை சுற்றி யுள்ள கடலில் கடுமையான சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், அந்த பகுதியில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கடற்கரையை ஒட்டிய 300 கி.மீ., பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (நவம்பர் 20) ஆஸி., நேரப்படி காலை 9.43 மணிக்கு நியூ கலிடோனியா அருகே பலமுறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மணி நேரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலஅதிர்வு இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

கார்ட்டூன் கேலரி