நாடாளுமன்றத்தில் தீ விபத்து!

--

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்துதீயை அணைத்தன. இதனால்,

இது குறித்து டில்லி தலைமை தீயணைப்பு அதிகாரி அடுல் கார்க் தெரிவிக்கையில், “ நாடாளுமன்றத்தில் உள்ள முதல் தளம் அறை எண் 50ல் யு.பி.எஸ். வைக்கப்பட்டு உள்ளன.  இந்த அறையில் இருந்து புகையும், தீப் பொறியும்வருவதாக இரவு 9.30 மணி அளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 15 நிமிடங்களில் தீயைஅணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தவிட்டோம்.

இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. நாளை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், சிறிது பரபரப்புடன் இருந்தோம்.

ஆவணங்கள் வைத்திருக்கும் அறையில் எந்தவிதமான விபத்தும் இல்லை சேதமும் இல்லை ” என்று அவர் தெரிவித்தார்.