நிரவ் மோடி மோசடி: டில்லி, மும்பையில் அமலாக்கத்துறை தொடர் ரெய்டு

--

டில்லி:

ஞ்சாப் நேஷன் வங்கியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நாடு முழுவதும்  சோதனை நடத்தி வருகிறது.

மும்பை, டில்லி, சூரத், ஜெய்பூர் நகர்களில் நிரவ் மோடி மற்றும்  மெகுல் சோக்‌ஷிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றும்  சோதனை நடத்தி வருகிறார்கள்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில்  ரூ.280 கோடி அளவுக்கு  மோசடி தொடர்பாக பிரபல வைர வியாபாரியான  நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், வர்த்தக கூட்டாளி மெகுல் சோக்‌ஷி மற்றும் 2 வங்கி அதிகாரிகள் ஆகியோர் மீது கடந்த மாதம் 31-ம் தேதியே சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆனால்,  வழக்கு பதியப்படும் முன்னே நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றது அம்பலமாகி இருக்கிறது.   நிரவ் மோடியும், அவரது சகோதரர் நிஷாலும் கடந்த மாதம் 1-ம் தேதி இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர். இதில் நிஷால் பெல்ஜியம் நாட்டு குடிமகன் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான கடைகளில் நேற்றும் இன்றும் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற சோதனையின்போதுர,  நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி நகைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், வங்கி கணக்கிலிருந்த ரூ. 3.9 கோடியும் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது பாஸ்போர்ட்டை முடக்க வெளியுறவுத்துறைக்கு அமலாக்கத்துறை பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் அவர் ஏற்கனவே வெளிநாடு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 22-ம் தேதி டாவோஸ் நகரில் நடைபெற்ற  உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நிரவ் மோடி புகைப்படம் எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed