மே.வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் கட்சியான திரினாமூல் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதாவும் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான இடதுசாரிகளும் உடன்பாடு வைத்துள்ளனர். இந்த கூட்டணியில் அண்மையில் தொடங்கப்பட்ட ‘இந்தியன் மதச்சார்பற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியும் உட்ன்பாடு வைத்துள்ளது.

முஸ்லிம்கள் மத்தியில் இந்த முன்னணிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் – இடதுசாரிகள் – இந்தியன் மதச்சார்பற்ற முன்னணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க ‘பிரிகேட்’ அணி வகுப்பு மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மைதானம் நிரம்பி வழிந்தது. கட்சியினர் இந்த கூட்டத்தை எதிர்பார்க்க வில்லை.

திரினாமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினரும், இந்த கூட்டத்தை பார்த்து மிரண்டுள்ளனர்.

– பா. பாரதி