பஞ்சாபில் கோரம்: தசரா பண்டிகையை காண வந்த மக்கள் மீது ரயில் மோதி 50க்கும் மேற்பட்டோர் பலி

பஞ்சாப்: 

மிர்தசரஸில் தசரா பண்டிகையை காண வந்த மக்கள் மீது ரயில் மோதியதில் 50க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்திருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பதான்கோட் பகுதியிலிருந்து அமிர்தசரஸ் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில், அங்கு தசரா பண்டிகை கொண்டாட வந்த மக்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே  ரயிலில் சிக்சி நசுங்கி பல்ர். உயிரிழந்துள்ளனர்.

தசரா பண்டிகையையொட்டி, ராவணின் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சியின்போது, அங்கிருந்த மக்கள் சிதறி ஓடி அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்றபோது, அந்த நேரம் வந்த ரயில் மோதியதால் ஏராளமானோர் சிக்கி பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அமிர்தசரஸ் அருகே உள்ள சவுரா பஜாரில்  இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து கூறிய அந்த பகுதியை சேர்ந்தவர்,  “நிர்வாகமும், தசரா குழுவும் தவறு செய்கின்றன, ரயில் நெருங்கி வரும் போது அவர்கள் எச்சரிக்கையை எழுப்பியிருக்க வேண்டும், ரயிலை நிறுத்தி அல்லது தாமதப்படுத்திவிட ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இதை செய்யாததால்தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.