வெறித்தனமான ‘மாஸ்டர்’ படத்தின் 3 வது லுக் வெளியீடு…!

விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைமும் கைப்பற்றியுள்ளன.

இந்த படத்தின் தெலுங்கு உரிமையை தற்போது முன்னனி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான east coast production நிறுவனத்தின் மகேஷ் எஸ் கோநீறு காரு என்பவர் வாங்கியுள்ளதாக தவல்கள் கசிந்துள்ளன.

லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் மாஸ்டர் படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாளவிகாவிற்கு காதல் காட்சிகள் மட்டும் அல்லாமல் சண்டை காட்சிகளும் உள்ளதாம். படத்திற்காக மாளவிகா Parkour என்னும் மார்ஷியல் ஆர்ட்ஸை பயின்று வருகிறாராம். இதில் ஆண்ட்ரியாவுக்கும் சில சண்டை காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் முக்கியமாக இந்த சண்டை காட்சிகள் பேசப்படும் என்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் 3rd லுக் வெளியாகியுள்ளது .