’ அந்த மாதிரி’’ காட்சிக்கும் மாஸ்டர்..

’ அந்த மாதிரி’’ காட்சிக்கும் மாஸ்டர்..

சினிமாவில் நடிகர்-நடிகைகளால் சுலபமாக நடிக்க இயலாத சண்டை , டான்ஸ் போன்ற காட்சிகளை படமாக்க மாஸ்டர்கள் தேவைப்படுவார்கள்.

‘இப்படி சண்டை போடு’’ ‘இப்படி டான்ஸ் ஆடு’’ என்று சொல்லிக் கொடுப்பார்கள் , மாஸ்டர்கள்.

இந்தியாவில் முதன் முறையாக ‘அந்த மாதிரி’ காட்சிகளில் எப்படி நடிப்பது எனச் சொல்லிக்கொடுக்கக் கனடா நாட்டில் இருந்து ஒரு மாஸ்டரை வரவழைத்துள்ளது ’’வெப்சீரீஸ்’ யூனிட்.

பாக்யராஜ் பாணியில் சொன்னால்-

 அந்த ’விவகாரமான’ வெப் சீரிஸ் பெயர். மாஸ்ட்ரம்.

படுக்கை அறை காட்சிகள் தாராளமாகப் புழங்கும் அந்த சீரிசின் கூடல் காட்சிகளை தத்ரூபமாக ’’இயக்க’’ கனடாவில் இருந்து பெண் மாஸ்டர்,அமந்தா கட்டிங் ( அவர் பெயர் அது தான்) விமானத்தில் அழைத்து வரவழைக்கப்பட்டார்.

கலவியை விளக்கும் கதையைத் தழுவி இந்த சீரிஸ் தயாரிக்கப்படுகிறது.

படுக்கை அறை காட்சியில் ‘நடிக்கும்’’ நடிகருக்கும்,நடிகைக்கும் , காட்சியின் தன்மையை விளக்கி, ’மூவ்மெண்ட்’’கள் சொல்லி கொடுத்துள்ளார், அமந்தா.

டைட்டிலில் அவருக்கு என்ன பட்டம் கொடுப்பார்கள்:?

‘செக்ஸ் மாஸ்டர்’?

காலம் மாறி போச்சு.

 

– ஏழுமலை வெங்கடேசன்

கார்ட்டூன் கேலரி