விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஏப்ரல் 9-ம் தேதி படத்தை திரையங்குகளில் வெளியிட திட்டமிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மார்ச் 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சன் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #MasterAudioLaunch என்று பதிவிட்டு டிரெண்ட் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.