சிக்கலில் விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா….!

விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஏப்ரல் 9-ம் தேதி படத்தை திரையங்குகளில் வெளியிட திட்டமிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் தயாரிப்பாளரின் வீட்டில் நேற்று முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த வருமான வரித்துறை சோதனையானது விஜய் ‘மாஸ்டர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் எதுவும் பேசக்கூடாது, என்பதற்காக நடைபெறுவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர்ந்து தனது திரைப்பட நிகழ்வுகளில் அரசியல் பேசும் விஜயை, இந்த முறை பேச விடாமல் செய்வதற்காக கொரோனா வைரஸை காரணம் காட்டி ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவுக்கு தடை போட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.