‘மாஸ்டர்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழை வழங்கிய தணிக்கை குழு….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையும் லலித் குமாரிடம் உள்ளது.

படத்தின் தணிக்கையில் சில இடங்களை கட் செய்யச் சொன்னார்கள். அப்படிச் செய்யவில்லை என்றால் ‘ஏ’ சான்றிதழ் என்றார்கள். தணிக்கை அதிகாரிகளிடம் காட்சிகளுக்கான விளக்கம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கூறி பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. இறுதியாக ‘யு/ஏ’ சான்றிதழை வழங்கினார்கள். இதனைப் படக்குழு உறுதி செய்துள்ளது.