டிகர் விஜயை அவரது ரசிகர்கள் இதுவரை ‘இளைய தளபதி’ என அடைமொழி கொடுத்து அழைத்து வந்தனர்.
இப்போது விஜய்க்கு புதிதாக ‘மக்கள் தலைவர்’’ என்று புதுப்பட்டம் சூட்டியுள்ளனர், ரசிகர்கள்.
இன்று விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகிறது.

இதனை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ள விஜய் ரசிகர்கள் ‘மக்கள் தலைவர் விஜய்’’ என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
சமீப காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான், அவரது ரசிகர்களால்’ மக்கள் தலைவர்’ என்று விழிக்கப்பட்டு, சுவரொட்டிகளில் அந்த பட்டத்துடனேயே அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் விஜய்க்கு ‘மக்கள் தலைவர்’’ என்று புது நாம கரணம் சூட்டப்பட்டிருப்பது ஏன்?

வருமான வரி சோதனை உள்ளிட்ட பிரச்சினைகளில் விஜய் சிக்கி இருப்பதற்கு ரஜினியே காரணம் என ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.இந்த நிலையில், அதனை நிஜம் என்று நம்பி விஜய் ரசிகர்கள், ரஜினியை சீண்டி இருக்கலாம் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது.

இன்னொரு தரப்போ ‘மாஸ்டருக்கு’ தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று எதிர் வாதம் செய்கிறார்கள்.
‘மாஸ்டர்’ படத்தின் மக்கள் தொடர்பாளரும்,(பி.ஆர்.ஓ) ரஜினியின் நிரந்தர மக்கள் தொடர்பாளரும் ஒருவரே என்பது வேடிக்கையான முரண்.