விஜய்யின் ‘பிகில்’ படத்தின் வசூலை முன்வைத்து ‘மாஸ்டர்’ வியாபாரம்…!

--

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்து வருகிறார்.

சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் இதர மொழி உரிமைகள் தொடங்கி அனைத்துமே விற்பனையாகி விட்டது.

‘பிகில்’ செய்த மாபெரும் வசூலை முன்வைத்து ‘மாஸ்டர்’ வியாபாரம் நடந்திருப்பதால், படக்குழுவினர் இப்போதே நல்ல லாபத்தை அடைந்துள்ளனர்.

இருப்பினும் விநியோகஸ்தர்கள் மத்தியில் சிறிது பயம் இருக்க தான் செய்கிறது .

You may have missed