மாஸ்டர் படத்துக்காக எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி பற்றிய சுவாரசியமான தகவல்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை வெகு விமரிசையாக நடத்தினர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வரும் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார். .

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முக்கிய சண்டைக் காட்சி பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் முதல் சண்டைக் காட்சி சென்னை மெட்ரோவில் எடுக்கப்பட்டதாம். இதற்காக 3 மணி நேரம் வாடகைக்கு எடுத்தார்களாம். இந்த சண்டைக் காட்சி நல்ல முறையில் வந்துள்ளதாகவும், அனல் பறக்கும் விதத்தில், எடுக்கப்பட்டுள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சென்னை மெட்ரோவில் விஜய் பயணித்ததே இல்லையாம். இதனால் மெட்ரோவில் நடத்தப்பட்ட ஷூட்டிங்கின் போது விஜய் ரொம்பவும் ஆர்வமாக இருந்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் சொன்னபடி, ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.