டிஜிட்டலில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த லாக் டவுனைப் பயன்படுத்தி வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை டிஜிட்டல் நிறுவனங்கள் கைப்பற்றி வருகின்றன.

தற்போது ‘மாஸ்டர்’ படமும் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறிவருகிறது.

“‘மாஸ்டர்’ படம் முதலில் திரையரங்குகளில்தான் வெளியாகவுள்ளது. அதற்குப் பிறகுதான் டிஜிட்டலில் வெளியாகும். என ‘மாஸ்டர்’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .