இசை வெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்தத மாஸ்டர் திரைப்படத்தின் கதை…?

விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார் .சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. ஏப்ரல் 9-ம் தேதி படத்தை திரையங்குகளில் வெளியிட திட்டமிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதையடுத்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் வரும் 15-ம் தேதி மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் இந்த விழாவை நேரலையாக ஒளிபரப்புகிறது சன் டிவி. அதற்கான பிரத்யேக ட்ரெய்லரையும் சன் டிவி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை இன்று வெளியடப்படவுள்ள நிலையில், திரைப்படத்தின் கதை இதுதான் என இணையத்தில் ஒரு கதை வெளியாகி வைரலாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் விஜய் பேராசிரியராக இருக்கும் கல்லூரியில் மாலவிகா மாணவியாக நடிப்பதாக யூகிக்கப்படுகிறது. அவர்., சேலை அணிந்து புத்தகங்களை சுமந்து செல்வதைக் காண முடிகிறது. எனவே, அவர் ஒரு நூலகர் அல்லது ஒரு கற்பித்தல் ஊழியராக நடிக்கலாம் எனவும் நெட்டிசன்களை யூகித்துள்ளனர்.

முன்னதாக இத்திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி ரெய்டு என்னும் பாடலை நேற்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.