விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மாஸ்டர்.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் சரியான பொங்கல் விருந்தாக மாஸ்டர் அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற நிலையில் வசூல் ரீதியாகவும் மாஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ரூ.23 கோடி வசூல் செய்திருப்பதாகவும், கர்நாடகா மற்றும் கேரளாவில் முதல் நாளான நேற்று ரூ.6 கோடியும், மொத்தமாக ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.