லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய் .XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது, இந்த படத்தின் தெலுங்கு டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான குட்டி ஸ்டோரி பாடல் தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ளது. தமிழில் விஜய் பாடிய இந்த பாடலை தெலுங்கில் அனிருத் பாடியுள்ளார்,